ஜன்னல் நிலா: பொன். குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
இரவிலேயே காண முடியும்வானத்து நிலா.பகலிலே மட்டும் தோன்றும்ஜன்னல் நிலா.வயதானாலும் வனப்பாகவே இருக்கிறதுவானத்து நிலா.வயதானதால் பொலிவிழந்து விடுகிறதுஜன்னல் நிலா.வானத்து நிலாவிற்கு உண்டுகறை .ஜன்னல் நிலாவை அடைத்திருப்பதுசிறை.வானத்து நிலாவிற்கு துணையாகநட்சத்திரங்கள்.ஜன்னல் நிலாவிற்கு துணையாககுடும்பஸ்தர்கள்.வானத்து நிலாவிற்கு ரசிகர்கள் உண்டு.வாழ்க்கைத் தரவேண்டியதில்லை.ஜன்னல் நிலாவிற்கும்ரசிகர்கள் உண்டு.வாழ்க்கைத் தர எவரும்முன் வருவதில்லை.