கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு ; ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கென ஓடும் பயணத்தில் 
தூரங்களும், பாதைகளும் வெவ்வேறென்றாலும் 
ஆரம்பமும், முடிவும் ஒன்றுதான்.

சிலருக்கு தொடங்கியவுடன் முடியும் பயணம்,
பலருக்கோ பாதியில் முடியும்.
இன்னும் சிலருக்கோ களைத்து சோர்வுறும் 
வரையில் தொடரும்.

ஒருவழிப் பாதையில் திரும்பிப் பார்க்க முடியும்,
ஆனால் வந்த பாதையில்  திரும்பவும் 
பயணிக்க முடியாது.

எல்லாம் இருந்தும், இலக்கை அடைந்தும், 
ஏக்கத்துடன்  முடியும் பயணங்கள் சில.
எதுவுமே இல்லையென்றாலும், இலக்கை 
எட்டவில்லையென்றாலும் திருப்தியுடன் 
முடியும் பயணங்கள் பல.

இலக்கை அடைய நேரான பயணங்களும் உண்டு,
குறுக்கு வழிப் பயணங்களும் உண்டு.
பயணத்திற்கும், ஓடுவதற்கும் 
அனைவருக்கும் கிடைக்காத 
வாய்ப்பு கிடைத்தமைக்கு பிரதி பலனாக 
என் ஓட்டம், என் இலக்கு என்னும் பயணம் 
முடிவதற்குள் தானும் வாழ்ந்து 
பிறரையும் வாழவைப்பதே சிறந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT