முகப்பு
கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம் : கே. அசோகன்

Updated On : 19 செப்டம்பர், 2016 at 3:12 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
ஆற்றின் ஓட்டத்தை தடுத்தேஅணையாக கட்டியே வைத்துசோறளிக்கும் உழவன் முகத்தில்சோகத்தை ஏற்றியே விட்டார் !நாற்றுக்கு தண்ணீர் கேட்டால்நடுவீதியில் கூப்பாடு போட்டேவெஞ்சினம் கொண்டு தானேவெறியோடு கலவரம் ஏனோ ?ஊற்றான சிற்றருவி தானும்ஊர்பேரினை பார்ப்ப துண்டோ ?!காற்றுதான் வீசூகையில் மேற்குகிழக்கு   என்றா காண்கிறது ?போற்றிடும் காவிரி நதியோபூமியில்  பாய்ந்துதான்  ஓடஆற்றுநீர்  பங்காய் கேட்டால்ஆறாகவே  இரத்த வெள்ளம்!ஓடும்நதி தண்ணீ ரெல்லாம்ஒரினமென்று பார்ப்ப துண்டோ ?காட்டில் பொழியும் மழைநீரும்காட்டாறாய் பெருகித் தானேநாடெது என்றே கேட்டுத்தான்நதீநீராய்  பாய்கின் றதோ ?நாடுநமதென  வாய்தான்  பேச!நதிநீருக்கே  பேதங்கள் ஏனோ ?இயற்கை வானத்து  மழைநீர்எவருக்கும் பொதுவென பொழிகிறது?வயலுக்கு தண்ணீர் கேட்டால்வன்முறை வித்திட்டு நாளும்புயலென சீறிப்பாய்ந்தே வீதியில்போராட்டம்தான் செய்கின் றாரே!தன்னலத்தை  பெருக்கிய தாலேதண்ணீருக்கு  இரத்த வெள்ளமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.