முகப்பு
கவிதைமணி

தண்ணீருக்கு ரத்தம்: பா. சத்தியமோகன்

Updated On : 19 செப்டம்பர், 2016 at 4:40 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
நடக்கக்கூடாது இப்படிதண்ணீர் கேட்டால் தண்ணீர்தான் தரவேண்டும்தண்ணீர் கேட்டால் அன்புடன் தரவேண்டும்தண்ணீர் கேட்டால் பகிர்தல் பிறக்க வேண்டும்ஏன் இப்படி ஆயினர் மனிதர்கள்மனிதர்கள் மனசா இப்படி ஆனது ?நியாயங்களின் கருணை பிறந்தால்தவிப்பது தன் சகோதரன் என்பது தெரிந்தால்அங்கிருந்து நீர் இங்கே வரும் - இங்கிருந்து நன்றி உணர்வு அங்கே செல்லும்.கபினி அணை மட்டுமல்லஎந்த அணையும் எவரும் கட்டமாட்டார்கள்"நாங்களும் வாழ்கிறோம் நீங்களும் வாழ்வீர்" என்ற இதயம் விரியும்திறந்து விடாதே என்று கூக்குரல் இடுபவர்வீட்டினில் ஒரு நாள் நீர் தடைப்பட்டால்எப்படியெல்லாம் துடிப்பர்நடக்கக்கூடாது இப்படி"கருணை இல்லா ஆட்சிகடுகி ஒழிக" என்று வள்ளலார் பாடல்இந்த விவகாரத்தில் யாரும் பாட நேரக்கூடாதுதண்ணீர் கேட்டால் தண்ணீர்தான் விடவேண்டும்ஆம்தண்ணீரே யாவர் பசிக்கும் ஒரே சாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.