முகப்பு
கவிதைமணி

நீதியை தேடி:  ச. பிரசன்னா

Updated On : 23 செப்டம்பர், 2016 at 9:13 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
எங்கு தேடினாலும்நீதி கிடைக்கநீதி கேட்க வேண்டியே இருக்கிறது.நிதி கேட்டால் கூடகிடைக்கிறது.நீதியோ,நிதி தந்தாலும்கிடைக்க தவறுகிறது.தாமதிக்கப்பட்ட நீதிதண்டிக்கப்பட்ட நீதிஎன சொன்னாலும்கிடைக்கின்ற நீதிகள்எப்போதும்தவறான நீதிகளே !நீதிக்கு தலைவணங்குஎனவசனங்கள் பேசும்வழக்கறிஞரேநீதியை வணங்காத போதுநீதி எப்படி வாழும் ?தீர்ப்புகள் திருத்தப்படலாம்வழக்குகள் தொடரலாம்குற்றங்கள் பரவலாம்ஆனால்என்றேனும் நீதி கிடைக்கும்என்பதேநிரந்தர நியதி.நீதி தேவதையின்கண் மறைக்கப்படலாம்குற்றவாளி நிரபராதி ஆகலாம்நிரபராதி குற்றவாளி ஆகலாம்ஆனால்அவ்விருவருக்கான நீதிஎன்றேனும் எப்படியேனும்கிடைக்குமென்பதேநீதியின் மாறாத  நீதி .கொலை செய்யப்பட்டவளுக்காய்நீதி கேட்பதில்லை;தற்கொலை செய்த கொலைகாரனுக்காய்நீதிகேட்கும் அபத்தம்அரங்கேறலாம்.ஆனால் ,அங்கு நடந்ததும்தவறுக்கு தவறே தண்டனைஎன்றநீதியே 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.