கவிதைமணி

நீதியைத் தேடி: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
ரத்தம் கொத்திக்குதே !நெஞ்சம் கனக்குதே !நீதி, நேர்மை, நியாயம் ;நிலத்தடி மண்ணாய் போனதால் ! பாதகம் செய்தோர் பல்லிளிக்க ;பாதிக்கப்பட்டோர் பாதாளக்குழியிலே !கண்ணிருந்தும் குருடர்களானோம் !காதிருந்தும் செவிடர்களானோம் !வறுமை கோர்ட்டில் இருந்துவிட்டால் ;வழக்கும் கூட தேடிவரும் !தட்டிக்கேட்கவும்  நாதி இல்லை !நடுத்தர வர்க்கம் என்பதாலே !நல்லவனாய் இருந்தால் போதும் !நடுநிசியும் நரகமாய் மாறும் ! காக்கி உடுப்பும் ,கருப்பு உடுப்பும் -காசுக்கு மட்டுமே கண்திறக்கும் ! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ;கடைவீதியின் குப்பைகளானதே !நீதி தேடி அலைவதால் நிம்மதியுண்டா ? நீதி கிடைக்க நித்தம் ஓர் அம்பத்கார் -நிலத்தில் உதிக்காது போனால் ;நீதி என்பதும் நிலத்தடி நீரே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT