கவிதைமணி

நீதியைத் தேடி: ஆப்ரகாம் வேளாங்கண்ணி 

கவிதைமணி
நீதியைத் தேடி போவதற்கேஅஞ்சுகிறது உலகம்காசு பணம்  உள்ளோர் பக்கமே பாதகங்களை செய்தோரே ஆயினும் விடுபடுவர் விசாலமாகஅந்த சேதியைக் கேட்டாலேபணங்காசே பேசும் என்றபீதியிலிருந்து விடுபட தன்எதிரியை அழித்திடுவர்பாதிக்கப்படுபவர்கள் இருக்கும் மீதிபேர் சலாம் போடுகிறார்கள் அஞ்சிஏழைகளின் வழக்கை ஏற்க பூனைக்கண்மூடி பாலைக் குடித்து பள்ளம் தோண்டி எச்சமிட்டு மண்ணால் மூடிடும் கதைகளே உருவாகும்.. நெற்றிக்கண் திறப்பினும்குற்றம் குற்றமேஎன்ற காலம் இன்றில்லைஏக்கமே மிஞ்சியதுஆக்கமில்லை எதிலும்துக்கமேயன்றி வேறேதுதூக்கமில்லா கண்களே...நீதியைத் தேடிச்சென்ற மங்கை வீர நங்கை கண்ணகியைப்போலொருத்தி பிறப்பாளா சிரந்திட நீதிஎன்றென்றும்         கண்கள் கண்ட அநியாய மதை, அதே கண்களே இல்லை என்கிறது...நீதி இடுப்பொடிந்து எழகூட இயலாது படுக்கடி யாய்க் கிடக்க..மின் கேமரா மூன்றாம் கண்பொய்ப்பதில்லை, பொய்க்க வாய்ப்பில்லை ...அதனிடத்தில் பயம் இல்லை பணம் தேவையில்லைவேண்டியவர் வேண்டாத வரில்லை  ஒளிவு மறைவில்லை..நீதியைத் தேடிப்பிடித்து மறவாது தண்டிக்கும் நிச்சயம் நிச்சயமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT