எளியாரை வலியார் வாட்டி வதைக்கும்
இல்லாரை இருப்பார் தொல்லைப்படுத்தும்
எத்தன்ஏமாளியைஏய்த்துப் பிழைக்கும் –இந்நாள்
பேதையர்நீதியைத்தேடிச்செல்வழியேது??
கொலை கொள்ளைகற்பழிப்பு இழிச்செயல்
பல்செய்கயவர் தஞ்செயல் மறச்செயலென்று
பொய்வாதிட்டு மன்றேறி வெல்லும்–இந்நாள்
மெய்யர்நீதியைத்தேடிச்செல்வழியேது?
காதலனே காதலியைக் கொலைபுரியும்
சாதகம் செய்காவலரே பாதகம் செய்யும்
மனங்கடியவர் கொடுவினை செய்யும் - இந்நாள்
நன்றுசெய்யர்நீதியைத்தேடிச்செல்வழியேது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.