கவிதைமணி

கைகோர்ப்போம்: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி

ஒருகை ஓசை ஒலிப்பதில்லை –இங்கு
இருகையோசையை   எதிர் ப்பதில்லை
ஆயிரம் கைகள் கூடிவிட்டால் –அநீதி
அஞ்சாமல் எழுந்து நிற்பதில்லை.

கைகளின் சக்தி மகத்தானது-அது 
சாதி சமயக் குறியில் லாதது
உழைக்கும் கைகள் உறுதியானது –அது
உலகுக்கு குழைக்க மறுத்திடாதது   

நெசவாளர் குயவர் கூலியென – அதன்  
நிலையினைப் பிரித்திட வியலாதது
கைகளை உயர்த்திப் போராடுவோம் –உழவர்  
உரிமைக் குரலதை  ஒலித்திடுவோம்

இளைஞர் பெண்கள்  முதியவர் –என  
எல்லாரும் சேர்ந்தணி வகுத்திடுவோம்,
எங்கு நடந்தாலும் அநீதிதான்  – அதை  
எப்போது நடந்தாலும் கூடி எதிர்ப்போம்.

வல்லான் கொடியனைக் கண்டஞ்சிடோம்  –இனி  
வாய்பொத்தி கைகட்டி நின்றிடோம்
இளங்காளையர்  குழுவின்  தலைமையிலே-நாம் 
இழந்தன அனைத்தையும் மீட்டெடுப்போம் .  
காலமும் தூரமும் தடையன்று –அதனால்  
கடலோ கரையோ நடுத் தெருவோ
கணமே கூடுவோம் எதிர்த்திடுவோம்  –ஒரு
கடலென அலைபோல்   கைகோர்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT