கவிதைமணி

கோடை மழை:  கவிஞர். டி.கே.ஹரிஹரன்

கவிதைமணி
மாமருந்தாய் கோடையிலே பெய்வ துண்டு  மனதிற்கும் உடலுக்கும் சுகங்கொ டுக்கதேன்மழையாய் குளிரவைக்க வருவ துண்டு,  தீவெயிலை அணைப்பதற்கு முயற்சி செய்துபேய்மழையாய்ச் சிலபோது தருவ துண்டு   பிழையான மனிதர்தம் ஆசை யாலேதாமதந்தான் மழைபெய்யத் தயக்கங் கொண்டு   சரியான மழையின்றிப் பொய்க்க லாச்சே!கோடைமழை பெய்திடுமோ எரிக்கும் வெப்பம்   குறைந்திடுமோ குளிர்ந்திடுமோ சுற்றும் பூமிஆடையென நீர்மூட நதிக ளெல்லாம்   அலைபுரளப் பாய்ந்திடுமோ வற்றா வெள்ளம்கூடிடுமோ நீர்ப்பஞ்சம் இல்லா நாடாய்க்   கொண்டிடுமோ விவசாயம் பெருகு தற்குஓடிடுமோ வயல்வெளியில் தண்ணீர் எங்கும்    உவந்திடுமோ மனமிந்தக் காட்சி கண்டு.வசந்தந்தான் கோடைமழை பெய்த தென்றால்    வாட்டமெலாம் நீங்கிவிட வாய்க்கு மன்றோ.நிசமிந்தக் கனவுதனை நனவாக் கத்தான்    நிறையமரம் நட்டாக வேண்டும் தூய்மைப்பசுமையினை ஊரெங்கும் பரப்ப வேண்டும்    பட்டமரம் தளிர்த்திடவே வழிகள் செய்துவிசையுடனே நேர்மறையாய்ச் செயல்க ளாற்றி    வெற்றிகொள்ள இயற்கையினைக் காக்க வேண்டும்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT