கவிதைமணி

கோடை மழை: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

சூரியதாகம் தீர்ந்ததும்
கோடைமழை வருவது தானே
பொருத்தம்;

வள்ளுவன் அன்றே வாய்
மலர்ந்தான்;
விசும்பின் துளிவீழ்ந்தால் தான் பசும்புல்
தலைகாட்டுமென்று;

விழ மறுக்கிறதே மழைத் துளி;
ஏன் இந்த நிலை?
வேரோடு வெட்டிச் சாய்த்த
மரங்கள் எத்தனையோ?

கக்கும் வாகனப் புகையில் தான் எத்தனை நச்சு?
இயற்கையை மறந்தோம்,
இன்னலுக்கு ஆளானோம்;

நீருக்காக ஏங்கும் பறவைகளுக்காகவும்.
விலங்கினங்களுக்காகவும்
தாவரங்களுக்காகவும்,மழை
வரம் தருவாயா,கோடை மழையே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT