கவிதைமணி

மழை நீர் போல: கவிஞர் இரா. இரவி

கவிதைமணி

தனக்காக பெய்யவில்லை ஊருக்காகவே பெய்யும்
தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ் !

மழை நீர் போல உதவியாக இருந்திடு
மண்ணில் விழுந்தால் மகசூல் அதிகம் !

மற்றவருக்கு உதவிடும் உயர்ந்த உள்ளம்
மழை நீர் மனிதர்களின் உயிர் வளர்க்கும் நீர் !

மழை பொய்த்தால் வறட்சி வரும்
மழை பொழிந்தால் வளங்கள் பெருகும் !

வானிலிருந்து வழியும் அமுதம் மழை 
வான்சிறப்பில் வள்ளுவர் பாடியதும் மழை !

நீரின்றி அமையாது உலகு என்பது உண்மை
நீரின் வருகை மழையால் என்பது உண்மை !

மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறம்
விண்ணிலிருந்து விழுந்தாலும் நதியாக நடக்கும்!

மரங்கள் வளர்ந்திடக் காரணம் மழைநீர்
மழைநீர் பொழிந்திடம் காரணம் மரங்கள் !

ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்கின்றன
உலக மனிதர்களும் அன்பு செலுத்து வாழுங்கள் !

கழுதைக்கு கல்யாணம் செய்வதால் வருவதில்லை
காடுகள் செழிக்க வைத்தால் வரும் மழை !

யாகம் வளர்ப்பதால் வருவதில்லை மழை
யாவரும் மரம் வளர்த்தால் வரும் மழை !

ஆடு வெட்டுவதால் சேவல் அறுப்பதால் வராது மழை
அனைவரும் இயற்கையை நேசித்தால் வரும் மழை !

பொதுவுடைமைவாதிக்கு இலக்கணம்  மழைநீர்
பொதுநலம் பேணி வாழ்ந்தால் நீயும் மழைநீர் !

வானிலிருந்து வந்த மழைநீர் ஆவியாகி  
வானம் செல்லும் கதிரவனின் உதவியால் !

வான்புகழ் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமா?
வான்மழை நீர் போல வாழ்ந்திடப் பழகு!

அளவிற்கு அதிகமானால் மழை நீரும் நஞ்சாகும்
அளவோடு யாரிடமும் பழகுவது நன்றாகும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: பினராயி விஜயன் வாக்களித்தார்!

அமித் ஷா கைகள் நடுங்கின; என் சவாலை அவர் ஏற்கவில்லை! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT