காணும் திசையெல்லாம் கருத்தரிப்பு மையங்கள் !நானும் பார்க்கின்றேன் ! நாள்தோறும் கூட்டங்கள் !போதும் 'பெண்'ணென்று பிறந்தசில மணியிலே...ஏதும் நினைக்காமல் எறிகின்றார் மறுபுறத்தில் !தேவன் அருளாலே நானில்லை இருபுறமும்...ஜீவன் என்ஜீவன் நீவந்தாய் எனக்கென்று !வாழும் என்வாழ்வில் வளம்சேர்க்க வந்தாயே !யாழின் இசைதாண்டி இனிக்கின்ற கண்மணியே !யானும் என்செய்தேன்.. தவமென்று அறியேனே !ஊனும் உயிரிதுவும் உனக்கென்றே வாழ்வேனே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.