கவிதைமணி

எதிர்காலம் : கே.நடராஜன்

கவிதைமணி

நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை  படைத்து இவ்வுலகு ...சொன்னான் 

வள்ளுவன் !  வள்ளுவன் வாக்கையும் வென்று 
நான் காண்பேன் கதிரவனை நாளை காலை 
என்னும்  நம்பிக்கை நம் எதிர்கால கனவுக்கு 

நாம் போடும் அடித்தளம் ...இன்று இல்லாவிட்டால் 
என்ன ..."நாளை  நமதே" என்னும் நம்  நம்பிக்கை 
மாற்றும் நம் எதிர்காலத்தை ஒரு வசந்த காலமாக !

புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் ...ராசி 
பலன் சொல்வதும்  அல்ல நம் எதிர்காலம் !
நம் எதிர்காலம் நம் கையில்தான் ..கை ரேகையில் அல்ல !

"நாளை நமதே " என்னும் நம்பிக்கை  நனவாக 
தேவை இன்று நம் கடின உழைப்பு ...
உழைப்பு ...விடா முயற்சி ..தன்னம்பிக்கை 
இம்மூன்றும்  அருமையான  வித்தாகும்  ஒரு 
முத்தான எதிர் கால மலர் பூங்கா  பூத்துக் குலுங்க! 

எதிர்காலம் நமக்கு ஒரு வசந்த காலமாக மலரட்டும் !
எதிர் மறை நினைவும் உணர்வும் நம்மை விட்டு விலகட்டும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT