கவிதைமணி

 எதிர்காலம்: -பெருமழை விஜய்,

கவிதைமணி

எதிர்மறை  எண்ணத்தோர்க்கு
எதிர்காலம்  இருட்டேயாகும்!
நேர்மறை   எண்ணங்கொண்டோர்
நெஞ்செலாம் ஒளியேதோன்றும்!

நிதர்சனம் என்னவென்றால்
நிச்சயம் இரண்டுமில்லை!
இரவும் பகலும்போல
இதுபாதி அதுவும்பாதி!


இன்றைய நிலையிலிங்கு
எதுவுமே சரியாயில்லை!
ஒளியுந் தெரியவில்லை
உண்மையும் வாழவில்லை!

இயற்கையும் உதவ வில்லை
இருப்போரும் கொடுக்கவில்லை!
உழைப்போரும்  உயரவில்லை
உத்தமர்க்கு மதிப்புமில்லை!

துணிவுடன்  செயல்பட்டாலே
துய்க்கலாம்  உலகவாழ்வை!
உறுதியாய்  உழைத்திட்டாலே
ஒளிர்ந்திடும்  உன்னெதிர்காலம்!

பரிதியாய்   பரிணமித்தாலே
பகைவர்கள்  ஒடுங்கிப் போவர்!
இறுதியாய்   நீயே வெல்வாய்
இனித்திடும் இங்கெதிர்காலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT