கவிதைமணி

எதிர்காலம்: மு.மணிமேகலை

கவிதைமணி

எண்ணற்றக்  கனவுகள்
ஏக்கப் பெருமூச்சு
வண்ணமாய் ஒருநாள் மலருமென
வாழ்வின் நம்பிக்கையே எதிர்காலம்!

கடந்த காலம் நடந்த பாதை
முட்களாக மலர்களாக!
நிகழ்கால நிகழ்வுகள்
நிலையறியாத் தடுமாற்றம்!

எதிர்காலக் கற்பனையோ
புதிரான மகிழ்வுடன்!
வளமான எதிர்காலம் என்ற
வாழ்த்தோடு நின்றிடாமல்
வலிமையான அடித்தளம் நாம்
அமைப்போமே நிகழ்காலத்தில்!

உழவை உயர்த்தி
தொழிலைப் போற்றி
உன்னதக்  கல்விச் சீரமைத்து
வளமைநிறை இயற்கை காத்து
முன்னோர் கூற்றை முறையாய்ப் பற்றி
நன்னெறி வழியில் நாடது செல்ல
எண்ணியக் கனவும் நனவாகிடுமே!

மனிதம் செழித்து மன்பதை சிறக்க
வழியும் பிறக்கும்! வாழ்ந்து உணர்வோம்!
எதிர்காலம் புதிரன்று !முழுமதி நிறைவாய் !               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT