முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்; சீர்காழி .ஆர்.சீதாராமன் 

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

காதல் என்ற தூதுக்கு முதல்
படியே கண்ணும் கண்ணும்
இடம் மாறி பரிமாறும் நேரம்
இன்ப அதிர்ச்சியே காரணம்

பெண்ணே நீ கண் மட்டும்            
சிமிட்டினால் பூமி என்ன
ஆகாயத்தையும் வளைத்து
போடும் ஆண் மகன் உண்டு

மழலை மட்டும் விடாமல்               
கண்  சிமிட்டினால் வீட்டு 
வாசலில் கூட்டம் அலை
மோதும் ரசிப்பதற்காக "

வானத்து மங்கையே நீ
கண் சிமிட்டினால்  மின்னல்
அதன் விளைவு இடி மழை
பூமியில் மண்வாசனை

மை இட்ட பெண்ணின்
விழிகள் கண் சிமிட்டினால்
எத்தனை எத்தனை விடாத
எதிர்பார்ப்புகள் ஆணிடம் "

கடல் அன்னை விடாமல் கண்
சிமிட்டினால் ஒயாத அலை
ஓங்கார இசை காதலர்
கூட்டம் மனம் மகிழ் காலம் ."

நிலாப் பெண் தொடர்ந்து
கண் சிமிட்டினால் குவிந்தது
நட்சத்திர பட்டாளம் கூடியது
பூமியில் கூட்டம் ரசிக்க 

நீ கண் சிமிட்டினால் இந்த
மண்ணும் விண்ணும் நீரும்
நெருப்பும் இன்பமும் இடை
விடாது தொடரும் பூமித் தாயே 

முழு கட்டுரையைப் படிக்க →