முகப்பு
கவிதைமணி

தனிமையொடு பேசுங்கள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி

தனிமையொடு பேசுங்கள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:
தனிமையுடன்   பேசுங்கள்   மனம்தி  றந்து            தன்மையாகப்  பேசுங்கள்   பிறரின்  முன்போஇனிமையாகப்  பேசியவர்   சென்ற  பின்போ            இன்னாத்தீ   செயல்போல   தூற்று   வோரேகனியிருக்கக்  காய்தன்னைத்  தின்னல்  போன்று            கனிவிருக்கக்  கயமையினைச்  செய்தல்  பற்றித்தனிமையுடன்   பேசுங்கள்   மனம்தி  றந்து            தனியாகப்  பேசுங்கள்   தெளிவு  கிட்டும் !தனிமையுடன்  பேசுங்கள்   கொஞ்ச  நேரம்            தனிமையாகக்   பேசுங்கள்   உள்ளத்  துள்ளேகுனியவைக்கும்  கபடுசூடு   தீய  எண்ணம்            குவியலாகத்   திணித்துள்ள   குப்பை   காண்பீர்பனிப்பொழிவால்   மறைந்துள்ள   காட்சி  போன்று            படர்ந்துள்ள   எண்ணங்கள்   மறைந்தி  ருக்கும் !தன்மையுடன்   பேசுங்கள்  கொஞ்ச  நேரம்            தனியாகப்  பேசுங்கள்   எரிப்பீர்   கொட்டி !அன்பான   அன்னையவள்   கைகள்  போன்று            அரவணைத்த   இயற்கையினை   எண்ணிப்  பார்ப்பீர்தன்னலத்தால்   வனப்புமிகு   மலைய   ழீத்தீர்            தண்மழையை  வரவழைக்கும்  காட  ழித்தீர்புன்மதியால்   அறிவியலைப்  பெரிதாய்  எண்ணிப்            புலம்புகின்றீர்  எல்லாம்மும்  அழிய  விட்டு !நன்றிதுவா   தனிமையிலே  நினைத்துப்  பார்ப்பீர்            நனியியற்கை  போல்மனத்தைக்  காத்தால்   வாழ்வீர் !
முழு கட்டுரையைப் படிக்க →