கவிதைமணி
தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்
“தனித்திருந்து”புலம்பிடுவோர் தனியாய் தானே தன்மனதை உணராது தவிப்பார் என்றும்பிணியென்று உடலினிலே ஏதும் இன்றி பிதற்றிடுவார் எப்போதும் “தாழ்வாய் எண்ணி”கனியென்றும் தெரியாது கசப்பும் தோன்றா காண்போரை யாரென்றே கருதாப் பார்வைபனியென்றும் பகலென்றும் புரியா தாக பகிர்ந்திடவே துணையில்லாது “பேசும் பாவம்”அறிவென்றோர் “ஞானத்தால்” நிறைந்தோர் உண்டு அவர்பேசும் பேச்செல்லாம் அகத்தோ டன்றோநெறிகாக்க வேண்டுமென்று நினைப்போர் எல்லாம் நிறைபொழுது “மொழிபேசா திருப்போர்”தானேஅறிந்துணரும் ஆய்வெல்லாம் ; ஒன்றாய் மக்கள் அகமகிழ வைப்பதற்கே மௌனம் கொள்வார்வறியவராய் தோற்றத்தில் வாழ்ந்து ; பேச வாய்திறக்கா திருப்பார்கள் “மனமே பேசும்”தேவையென்றே வாய்திறக்கும் “நிலையே இன்றி” தேவையில்லை என்றுரைக்க மனதால் பேசுமேவிநிற்கும் மிகவுயர்ந்த நேசம் பேச முந்திவந்து “தனிமையது நம்முள்” பேசும்ஆவியென்றால் ஆசைகொண்டு அலையுந் தானே ஆசைகளை அடக்குதற்கே அளவாய்ப் பேசுதாவுகின்ற மனம்அடங்க ; நம்முள் வந்து “தனிமையது பேசிடுமே”மனதில் நின்று
முழு கட்டுரையைப் படிக்க →