தனிமையோடு பேசுங்கள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
இந்த கால மனிதன் பறவை
மிருகங்கள் தனிமை விரும்பி
தனிமையோடு பேசி மகிழும்
தனிமை ஜீவன்கள் தான்
பல மணி நேரம் தினமும்
ஆணும் பெண்ணும் வலம்
வருவது கைபேசியோடு தான்
தனிமையோடு பேசும் காலம்
காதலர்களின் சொர்க்க பூமி
இன்பச் சுற்றுலா கனவு
வாழ்க்கை எல்லாமே தனிமை
பேச்சு சுகங்கள் தாங்கங்கள்
மனித உறவுகள் நட்பு அன்பு
இல்லாத தனிமரமான
மனிதர்கள் தான் தனிமை
விரும்பிய சுயநல பாவிகள்
இருள் சூழ்ந்த இடம் அமைதி
இல்லா மனம் துணை இல்லா
வாழ்க்கை இதமான சூழல்
தனிமையோடு பேசுங்கள்
அடர்ந்த மரம் நிழல் நிறைந்த
ஆலய வளாகம், தியானம்,
அமைதி பூங்கா ,யோகா,
தனிமையோடு சுகமாய் பேச
மனித மனங்களின் ரணம்
காயம் மன அழுத்தம் துக்கம்
வேதனை விசும்பல் ஒழிய
தனிமையோடு பேசுங்கள்
நிறைமதி சாந்தி அடையவே
இனிமையாய் வாழ புத்துயிர்
பெற வெற்றியை சுவைக்க
புதியவழி மலர்ந்திட பிறந்திட
தனிமையோடு சில காலம்
செலவிடு பொற்காலமாக்க