முகப்பு
கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: ப.க.நடராசன்

Updated On : 18 ஜூன், 2018 at 4:05 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM
வளங்கள் செழித்த நாடாம்நம் தமிழ் நாடு..மலர்களும் மரங்களும்செடி கொடிகளும்தத்தம் வனப்பால்மணம் வீசி தாயாய்அரவணைத்த நாடாம்நம் தமிழ் நாடு..சங்க இலக்கியங்கள்கொண்டாடிய நாகரிகம் தோன்றியநாடாம் நம் தமிழ் நாடு..இன்று இயற்கையைஇம்சித்து வளங்கள்சூறையாடப்பட்ட  சூழலில்இன்றைய தலைமுறையினர்மிச்சத்தை யாவது மீட்போம் எனஉறுதி கொள்வோம்..நெகிழி ஒழித்துஇயற்கை உரம் தனை ஊட்டிதாய்மண்ணை சக்தியாக்குவோம்.நாகரிகம் வளர்த்த நதியினைநீரோட்டமாக்கமணல் கொள்ளையைதடுத்து கரையோரம்கன்றுகள் மரக்கன்றுகள்நட்டு மழைநீரை நீர் ஆதாரமாக்குவோம்..எச்சம் மிச்சம் மீட்கஎள்ளளவும் பிசகாமல்எந்திரமாய் தந்திரமாய்செயல்பட்டால்மந்திரமாய்வளங்கள் மீண்டும்செழித்து வளரும்பத்திரமாய் பாதுகாப்போம்இயற்கையை..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.