முகப்பு
கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: உஷா முத்துராமன்

Updated On : 18 ஜூன், 2018 at 3:38 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM
மண்ணில் புதைந்த நிலத்தடி நீர்கண்ணில்  பட  மறுத்து மின்னலென  மறைந்து வருவதை  உணர்ந்து இருக்கும்  மிச்சமானநீரை மீட்டு  நம் சந்ததியினர் கரை சேர உதவுவோம்!உடற்பயிற்சியினை  மறந்துவாகன சவாரி  செய்து வெளியிடும்  காற்று தெளிவின்றி  மாசு அடைந்து வருவதை  உணர்ந்து நடைப்பயிற்சி  செய்து உடல் ஆரோகிக்யத்தையும் கடலிலிருந்து  வீசும் காற்றையும்மிச்சமென  மீட்டு நம் சந்ததியினர்  அச்சமின்றி வாழ  உதவுவோம்!அலைபேசியும், தொலைக்காட்சியும் கலைத்த  நம் மனதினை வலையிலிருந்து  மீட்டு நம்  சந்ததியினருக்கு தலைமுறையினை  புரிய  வைப்போம்! மிச்சம்....மிச்சம்......மிச்சம்.......என  உச்சக்  குரலில் கூவுவதைவிட்டு நடைமுறையில்  நிறைவேற்ற முயற்சித்து .....அயர்ச்சியின்றி  உழைப்போம்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.