மிச்சத்தை மீட்போம்: பெருமழை விஜய்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM
மிச்சத்தை மீட்டெடுக்க மிகுதியும் பலர்க்காசைகச்சத் தீவினையும் கயவர்க்குத் தாரை வார்த்தார்பச்சைத் தமிழனையே பகடைக் காயாக்கிசொச்சமே யில்லாமல் சுரண்டிட்டார் நாடுதனை!ஆற்றுமணல் சுரண்டல் அதன்பின் தாதுமணல்கிரானைட் குவாரிகளில் கணக்கின்றி பெருஞ்சுரண்டல்ஊரெங்கும் கிடந்த உதிரி நிலங்களையேஆள்வோர் பெயரால் அப்படியே மிகச்சுரண்டல்!ஆறடி நிலந்தான் அடிநிலத்தில் புதைவோர்க்குஅதுகூடச் சொந்தமில்லை சுடுகாட்டில் எரிவோர்க்கு!இருந்தும் மனிதன் இன்னும் சுரண்டுகிறான் இல்லாதவனைக் காட்டிலும் இருப்பவனே பெருஞ்சுரண்டல்!சுரண்டி வாழ்வதையே சுகமாய்க் கருதுமிவர்மிரண்டே வாழ்ந்து வெந்துயரில் மிகவுழந்துதரந்தாழ்ந்து போகின்றார்!தன்மதிப்பை இழக்கின்றார்!இவர்களிடமிருந்து இந்தியாவை நாம் மீட்டெடுப்போம்!