மிச்சத்தை மீட்போம்: -ரெத்தின.ஆத்மநாதன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM
அள்ளிக் காசாக்கிஅடாவடிகள் மிகச்செய்துபள்ளிக் குழந்தைகளும்பருகும் நீர்க்கேங்கவெள்ளத் திட்டினையும்விலைபேசி விற்றுவிட்டகள்ளத் திருடர்களைகச்சிதமாய் விலக்கிவிட்டுஆற்றில் நீரூறஅனைவருமே உளமகிழமிச்சமுள்ள மணலைமீட்டே எடுத்திடுவோம்!காசொன்றே குறியென்றுகயமைத்தனம் மிகச்செய்து ஆட்சியின் பெயரால்அக்கிரமங்கள் பலபுரிந்துநாட்டைக் கூறாக்கி நயவஞ்சகம் பலசெய்துநல்லோரை நசுக்கிநல்லதையெல்லாம் அழித்தவஞ்சகரை விரட்டிவிட்டுநல்லகண்ணு போன்றநலம்பேணும் தலைவர்களைமீட்டே எடுத்திடுவோம்!அத்தனையும் மீட்டெடுக்க அகவை நமக்கில்லை!இளைஞர்களே வாருங்கள்!இருப்பவற்றை மீட்டெடுங்கள்!உங்கள் வருங்காலம்உயர்வாக வேண்டுமெனில்மிச்சத்தை மீட்டுடெடுக்கவிரைவாக நீங்களெல்லாம்ஒன்றிணைந்து வாருங்கள்!உறுதியுடன் முன்னேறுங்கள்!வீணர்களை அழித்திடுங்கள்!விளைநிலங்களை தழைத்திடுங்கள்!