கவிதைமணி

ஒரு முறையேனும்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

கவிதைமணி
ஆடையக வாசலிலேஒய்யாரமாக நிற்கும் நீ...​அணிகலன்கள் அழகு சேர்க்க ஆடைகளும்  புத்தம் புதிதாய் !!!உன் பாதங்களோ பன்மடங்கு விலையுயர்ந்த  பாதுகைகளுக்குக் சொந்தக்காரனாய் !!!சுட்டெரிக்கும் வெப்பதில் மிதியடியும் இன்றி மேலங்கியும் இன்றி - என் பிட்டத்தைச் சுட்டிக்காட்டும் வட்டமான இரு ஓட்டைகள் கொண்ட காற்சட்டையுடன் அரை நிர்வாணமாய் உனை வெறித்துப்பார்த்திடும் நான் இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!!!உயிரை எனக்குத் தந்த இறைவன் உடையை மட்டும் உனக்குத் தந்ததேன் !!!கண்ணாடி பேழைக்குள்காட்சிப் பதுமையாய்  நிற்கும் உன் உடலை அலங்கரிக்கும் ஆடைகள் ஒரு முறையேனும் அதனைஏக்கத்தோடு காணும் எனது உடலைத் தழுவ  வாய்த்திடும் நாள் வருமோ!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

SCROLL FOR NEXT