கவிதைமணி

யார் இட்ட சாபம்:  பான்ஸ்லே

கவிதைமணி
நீர் நிலைகளில் அம்புலியைக் கண்டு ஆனந்தித்த  நாட்கள் பொய்யாகி அவ்விடம் ஆரவாரமின்றி கல்சீட்டுக் கட்டுகளாக மாறியதே இது யார் இட்ட சாபம் ?மாற்றம் என்கிற பெயரில் தலை விரித்தாடும் அநாகரீகம் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தினையும் மாசுபடுத்துகிறதே இது யார் இட்ட சாபம் ?சமுதாயத்தில் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அனைத்துமே தேய்ந்துபோய் சுதந்திரம் என்னும் பெயரில் வன்புணர்வு அதிகரித்து உள்ளதே இது யார் இட்ட சாபம் ?கல்வியை வியாபாரமாக்கி பதின் அகவையரின் மருவற்ற கனவுகள் வேரோடு களைந்து எரியப்  படுகிறதே இது யார் இட்ட சாபம் ?உண்ணும் உணவில் கலப்படம் உய்ய உதவும் மருந்தில் போலித்தனம் மித்திர உறவில் கபடத்தனம் திருமண பந்தத்தில் பிளவு இது யார் இட்ட சாபம் ?வான் பொய்த்தாலும் வருடம் பொய்க்காமல்ருது தோறும் சிரம் மழித்து நிற்கும் விருட்சங்களே சமுதாயத்தை சீர்திருத்த நீங்கள் மேற்கொண்டவேண்டுதலின் வரப்பிரசாதமா ? உங்களின் வேண்டுதல் நனவாகட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT