கவிதைமணி

யார் இட்ட சாபம்: பெருவை பார்த்தசாரதி

கவிதைமணி
போர்வீரர்களின் மனைவி தான் பாஞ்சாலி    பொதுச்சபையில் பட்ட துன்பம் தெரியாதா..?கூர்மதி கொண்டவர் பாண்டவர்! அவர்கள்    கொண்ட துன்பத்திற் கேதேனும் அளவுண்டா.?சூர்யகுல அரசன் அரிச்சந்திரன் தன்வாழ்வில்    சுடலையில் பிணமெரித்த நிலை எதனால்..?யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?    ஏனிந்தக் கஷ்டம் ? புரிவது மிகக்கடினமே..!மார்க் கண்டேயனுக்கு பதினாறில் மரணம்    மரணமில்லாச் சிரஞ்சீவி யானது எதனால்..?நேர்வாரிசு இல்லாமல் நானூறு வருடமும்    நகர்ந்ததே மைசூர்மஹா ராஜவம்சம் எப்படி..?நீர்மீதில் வாழ்நாளைப் போக்கும் மீனவர்    நித்தம் சோதனையில் நீந்திக்கழிக்கிறார் ஏன்?யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?    எவரும் எளிதில் அறியமுடியாத ரகசியமோ.?பார்மீதில் மாந்தராய்ப் பிறந்தாலே ஏதோ   பெரியதொரு துன்பத்தி லுழல்வது சகஜமே..!ஆர்வலரென தனைச் சொல்லிக் கொள்வார்    ஆதாய மிலாதெதையும் செய்ய நினையார்..!ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்    ஊரையே கொள்ளை யடிக்க நினைப்பார்..!நேர்மையாக வாழமுடியா நிலை தானின்று    நீரறிவீரோ?ஈதெலாம் யாரிட்ட சாபமென்று..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT