கவிதைமணி

யார் இட்ட சாபம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

கவிதைமணி

நாடு போற
போக்கைப் பாத்தா
எனக்குப் பிடிக்கல
நாணயமானவங்க
என்ன தான் ஆனாங்க

கூட்டம் போட்டு மனச ஏமாத்தி
ஓட்டு வாங்கிறாங்க
ஜெயிச்ச பின்ன என்ன ஆனாங்க
சாலையோரம் பாதையிலே
பிச்சை எடுக்கிறாங்க
கோயிலிலே நின்னு
கூப்பாடு போடுறாங்க

கைய காலாக்கி காசாக்கிறாங்க
தீமையே நாதமாக சுவாசிக்கிறாங்க
பாவத்தையே கண்ணாகப் பாவிக்கிறாங்க
யார் இட்ட சாபம்

யார் பெற்ற வரம் இது
தாங்குமா இந்த பூஉலகம்
மலையை குளமாக்குகிறான்
குளத்தை வீடாக்குகிறான்
நிலத்தை அபார்மெண்டாக்குகிறான்
யாரிட்ட சாபம்

பணக்குமியல் அதில் தூங்குகிறான்
பணத்தால் பாசத்தை மறக்கின்றான்
தாயினை முதியோர் இல்லத்தில்
சேர்க்கின்றான்
யாரிட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT