முகப்பு
கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: பெருமழை விஜய்

Updated On : 27 மே, 2018 at 2:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

என்றும் என் இதயத்தில்
எழுதி வைத்ததைப் போல்
நீங்கா   இடம்   பிடித்த 
நினைவகலா நிகழ்வு களில் 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
துன்பத்தின் உச்சக் கட்டம்!

மற்றவர்கள் மறுத்து ஒதுக்க 
மனமிறங்கித் தமிழர் களும்
வரட்டு மென்று வரவேற்றார்
வரப்போகும் துன்பம் அறியாமல்!

பாயில்   நோயில்   பலபேர்
வீழ்ந்ததுந்தான் உண்மை அறிந்தார்!
வேண்டாம் இது மூடுங்கள்!

விடுங்கள் எங்களை வாழ்வதற்கே!
என்றே  தினந்  தினமும்
ஏகமாய்  மக்கள்  கூடி 
காந்தி காட்டிய கண்ணியத்துடனே
கடலளவு பொறுமை காத்தார்!

Advertisement

மக்கள்   உயிர்   காக்கும்
மகத்தான பணி செய்வோர்
அவர்கள் உயிர் போக்கிடவே
அவசரமாய் முடிவு செய்து
பலரைக்  குறி   வைத்தே
பதைபதைக்கச் செய்து விட்டார்!

தமிழகப் பெரு வரலாற்றில்
தரங்கெட்ட இச் செயல்கள்
நிகழ்ந்ததைக் கேட்ட வுடன்
நெஞ்சே வெடித்தது போல்...

நினைவுகளும் அகன்றது போல்...
நடைப் பிணமாய் நாமெல்லாம்!
ஸ்டெர்லைட் இனி வேண்டாம்!

சீரியசாய் எதிர்த்த மக்கள்
சிறப்பாய் இனி வாழட்டும்!
பதின்மூன்று உயிர்ப் பலியோடு
அப்பாவத் தொழில் ஒழியட்டும்!

நல்லவையே இனி நடக்கட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.