என்றும் என் இதயத்தில்: பெருவை பார்த்தசாரதி
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM
இருவருமே இயற்கையாய் உரை யாடுதற்கு இலகுவாய்த் தண்ட வாளத்தில் நடந்தோம்.!வருகின்ற பேராபத்தை உணர வழியில்லை வந்தவேக மிகுரயிலைக் கவனிக்க வில்லை.!ஒருவர் இறக்க ஒருவருயிருக்கு ஊசலாட உடனொரு மாற்று இருதய சிகிச்சையால்.!இருவருயிர் ஓருயிராக இதயம் ஒன்றாகி என்றும் என்இதயத்தில் நீயே வாழ்கிறாய்.!அன்றுபெற்ற இதய தானத்தால் இன்றும் என்றும் காதலுக்கு மரணம் இல்லையாம்.!மென்று விழுங்கினாலும் உண்ட உணவு மெல்ல இரைப்பை செல்லநீயே காரணம்.!நன்றுடன் வாழ்ந்திட நீயளித்த இதயம் நன்றே இயங்கி ஒன்றானது ஊனுடம்பில்.!நன்றி சொல்கிறேன் நல்லுளம் மிக்கவளே நீ இறந்தாலுமுன் இதயம் இயங்குகிறது.!நேற்றிருந்தோர் இன்றிலை எனும் விதியை நியதியை வென்று விடுமோ மருத்துவம்.!மாற்றங்கம் பொருத்து மொரு மகத்தான மருத்துவத்தால் மறுபடியும் வாழ முடியும்.!கூற்றுவனை வெல்லவும் முடியும் மென்கிற கூற்றை..கொடையுள்ளம் எளிதாய்த் தரும்.!ஆற்றவொணாப் பெருந் துயரைக் களைந்து என்றுமென் இதயத்தில் குடி கொண்டாய்.!