முகப்பு
கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: -கோ. மன்றவாணன்

Updated On : 27 மே, 2018 at 2:28 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

திமுதிமு என்று மோதும்
திருவிழா நெரிசலில் அவளிருந்தால்
அவளை மட்டும் படம்பிடித்து விடுகிறது
என் கண்கள்
எத்தனை தொலைவில் இருந்தாலும்

கடல் மணலில் அவள் நடந்துபோன போது
கவிதையாய் விட்டுச் சென்ற சுவடுகளைக்
காற்றுக் கலைக்கும் முன்
கண்களில் ஒத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்

நான்
இரவில் நிலவைக் கண்டாலும்
எட்டிப் பார்க்கிறாள் அங்கிருந்தும்

Advertisement

உலக
ஓவியர்கள் வரைந்த பெண்ணோவியங்களைக் காண
ஓவியக் காட்சிக்கு அவளுடன் சென்றேன்

அழகோவியங்கள் எழுந்துவந்து
அவளுக்கு மாலை சூட்டின

என்
இதயத்தைத் திறந்து உள்ளே சென்றவள்
பூட்டிக்கொண்டாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.