நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள்

செ.குளோரியான்

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும்
                                                                                    முனிவரும்
புனைந்த கண்ணி, நீர், சாந்தம், புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம்செய் ஞானத்து உன்பெருமை மாசு உணாதோ மாயோனே!
                                                                                     மாயோனே,

எண்ணிய அனைத்துப் பொருள்களுக்கும் வித்தானவனே, அவை பொருளாக மாறும்போது, தன்னுடைய தன்மையிலிருந்து சிறிதும் மாறுபடாமல் இருக்கிறவனே,

(ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள் தோன்றும்போது, முதற்பொருள் சிறிதேனும் சிதைந்துவிடும், உதாரணமாக, மாவு குறைந்தால்தான் இட்லி வரும். ஆனால் இறைவனோ, அனைத்துப் பொருள்களுக்கும் காரணமாக அமைந்தும், தன்னுடைய தன்மையில் மாறாமல் இருக்கிறான்).

பல விண்ணோர்களும் முனிவர்களும் உன்னை எண்ணி நைந்து உள்ளே கரைந்து உருகுகிறார்கள், மாலைகள், நீர், சந்தனம், தூபம் ஆகியவற்றை ஏந்தி வந்து வணங்குகிறார்கள், மனத்தால் நினைக்கின்ற ஞானத்தையுடைய உன்னுடைய பெருமை இதனால் இழிவடையாதோ?

(உனக்குச் சமமானவர்கள் என்று யாரும் இல்லை, அப்படி யாராவது இருந்தால், அவர்கள்தானே உன்னை வணங்க வேண்டும், மற்றவர்கள் வணங்குவதால் உன் பெருமை குறைந்துவிடாதா?)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT