மாயோம், தீய அலவலை பெருமா வஞ்சப் பேய்வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுதுசெய்திட்ட
மாயன், வானோர் தனித்தலைவன், மலராள் மைந்தன்,
எவ் உயிர்க்கும்
தாயோன், தம்மான், என் அம்மான், அம் மாமூர்த்தியைச்
சார்ந்தே.
பெரிய வஞ்சகத்தையுடைய பூதனை என்னும் பேய் தீய சொற்களைப் பிதற்றிக்கொண்டு வந்தாள்.
அவள்முன்னே ஒரு தூய குழந்தையாக எம்பெருமான் வந்தான், அவளுடைய விஷப்பாலை அமுதம்போல் உண்டான், அவளை வதம்செய்தான், அத்தகைய மாயன், வானோர்களின் தனித்தலைவன், திருமகளின் தலைவன், எல்லா உயிர்களுக்கும் தாயானவன், தனக்குத்தானே தலைவனானவன், என் தலைவன், அந்த மாமூர்த்தியைச் சார்ந்தே நான் இனி வாழ்வேன், ஒருபோதும் பிரியமாட்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.