கடமாயினகள் கழித்து, தம் கால்வன்மையால் பலநாள்
தடம்ஆயின புக்கு நீர்நிலை நின்ற தவம் இதுகொல்!
குடம்ஆடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகுஅளந்து
நடமாடிய பெருமான் உருஒத்தன நீலங்களே.
நீலோற்பல மலர்களே,
குடக்கூத்து ஆடியவன், இந்த மண்ணும் விண்ணும் குலுங்கும்படி உலகை அளந்து விளையாடியவன், அந்தப் பெருமானின் திருமேனி நிறத்தை நீங்கள் பெற்றது எப்படி?
காடுகளிலே பூக்காமல், நீர்நிலைகளில் பூத்து, உங்களுடைய கால்களின் வலிமையினாலே பலநாள் (ஒற்றைக்காலில்) நின்று தவம் செய்தீர்களே, அந்தத் தவத்தினால்தான் எம்பெருமானின் திருமேனி நிறத்தைப் பெற்றீர்களோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.