நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

ஆறு சமயங்களும்

செ.குளோரியான்

பாடல் - 9

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும்
                                                                                           தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான்
                                                                                          அமரும்
வளம்கொள் தண்பணை சூழ்ந்து அழகுஆய திருக்குருகூர்
                                                                                           அதனை
உளம்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு
                                                                                           போகுறிலே.

பேசப்படுகிற ஆறு சமயங்களும் அதுபோன்ற பிறவும் சேர்ந்து பலவிதமாக வாதிட்டாலும் எம்பெருமானை, ஆதிப்பிரானை அளந்து காண இயலாது, அத்தகைய பெருமான், வளம் நிறைந்த, குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட அழகிய திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கிறார். நீங்கள் உய்வதற்கு விரும்பினால், அதனை மனத்தில் வையுங்கள்.

*******

பாடல் - 10

உறுவது ஆவது, எத்தேவும் எவ் உலகங்களும்
                                                                மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற
                                                               வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்
                                                               அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்கூத்தனுக்கு
                                                               ஆட்செய்வதே.

எல்லாத் தேவர்களும், எல்லா உலகங்களும், பிறவும் குற்றமில்லாத எம்பெருமானுடன் ஒத்து நிற்கின்றன, வயல்களிலே செந்நெல்லும் கரும்பும் ஓங்கி வளர்கிற திருக்குருகூரிலே அந்தப் பெருமான் எழுந்தருளியிருக்கிறான், குறுகிய வாமன அவதாரம் எடுத்தவன், பெரிய குடக்கூத்தில் வல்லவன், அவனுக்கு அடிமையாகித் தொண்டுசெய்வதே சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT