நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

குருகூர்ச் சடகோபன்

செ.குளோரியான்

கேடுஇல் விழுப்புகழ்க் கேசவனை, குருகூர்ச்
சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும்
பயிற்றவல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன்காண
நலன்இடை ஊர்திபண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ உலகுக்கும்
தரும் ஒரு நாயகமே.

அழிவில்லாத சிறந்த புகழையுடையவன் கேசவன், எம்பெருமான், அந்தப் பெருமானைப் பற்றிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்களுக்கு அவன் பல நன்மைகளைத் தருவான், நாடும் நகரமும் அவர்களை நன்றாகக் காணும்படி செய்வான், அவர்கள் எப்போதும் நல்ல விஷயங்களுக்கு மத்தியில் இருக்கும்படி செய்வான், பரமபதத்தை அருள்வான், தன்னுடைய மூன்று உலகங்களையும் ஆளும்படி செய்வான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT