சொல்லீர் என் அம்மானை, என்ஆவி ஆவிதனை,
எல்லைஇல்சீர் என் கருமாணிக்கச்சுடரை,
நல்ல அமுதம், பெறற்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரைஒத்து ஆண்அல்லன், பெண்அல்லனே.
என்னுடைய தலைவன், என் உயிரின் உயிர், எல்லையில்லாத சிறப்பைக்கொண்ட என் கருமாணிக்கச்சுடர், நல்ல அமுதம், பெறுவதற்கு அரிய பரமபதத்தின் தலைவன், அல்லிமலரின் வாசனையைப் போன்றவன், ஆணும் அல்லாதவனாகப் பெண்ணும் அல்லாதவனாக இருக்கிறவன், அவன் புகழைப் பாடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.