பாடல் - 9
அன்று மண், நீர், எரி, கால், விண், மலைமுதல்,
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்,
அன்று மழை உயிர் தேவும் மற்றும், அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.
எம்பெருமான், நம் அப்பன், அன்றைக்கு முதன்முதலாக உலகத்தைச் செய்தான், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மலைமுதலான பொருட்கள், சூரிய, சந்திரர் என்கிற சுடர்கள், பிற பொருட்கள், மழை, உயிர், தெய்வங்கள், இன்னும் அனைத்தையும் படைத்தான். இப்படி அற்புதமானமுறையில் அனைத்தையும் படைத்தான் பெருமான்.
***
பாடல் - 10
மேய் நிரை கீழ் புக, மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய, இன
ஆ நிரை, பாடி அங்கே ஒடுங்க, அப்பன்
தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே.
எம்பெருமான், நம் அப்பன், தீயைப்போல் பெய்த மழையிலிருந்து ஆயர்பாடியைக் காப்பதற்காகக் கோவர்த்தன மலையை எடுத்தான், அப்போது, மேய்கின்ற பசுக்கூட்டங்கள் அதன்கீழ் ஒதுங்கின, மலைமேலிருந்த விலங்குகள் புரண்டன, சுனைகளில் நிறைந்த நீர் அவற்றின் வாய்ப்பகுதியிலிருந்து முழங்கியபடி சொரிந்தது, பசுக்கூட்டங்களும் ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கின. இப்படி அற்புதமானமுறையில் கோவர்த்தன மலையை எடுத்து ஆயர்பாடியைக் காத்தான் பெருமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.