பாடல் - 11
தெளிவுஉற்று, வீவுஇன்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும்
தெளிவுஉற்ற கண்ணனைத் தென்குருகூர்ச் சடகோபன் சொல்
தெளிவுஉற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுஉற்ற சிந்தையர் பா மரு மூ உலகத்துளே.
எம்பெருமானே சிறந்த தெய்வம் என்ற தெளிவுடையவர்கள், அந்தச் சிந்தனையிலிருந்து மாறாதவர்களுக்கு வீடுபேறு அளிக்கிறவன் ஞானவடிவான கண்ணன், அப்பெருமானைத் தென்குருகூர்ச் சடகோபன் சிறந்த ஆயிரம் திருப்பாடல்களால் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், பாவம் மலிந்த மூன்று உலகங்களிலும் தெளிவான சிந்தையோடு விளங்குவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.