பாடல் 6
அவன் உடை அருள்பெறும் போது அரிதால்,
அவ் அருள் அல்லன அருளும் அல்ல,
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்,
சிவனொடு பிரமன், வண் திருமடந்தை
சேர் திரு ஆகம் என் ஆவி ஈரும்,
எவம் இனிப் புகும் இடம்? எவம் செய்கேனோ?
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்.
எம்பெருமானின் திருவருளைப் பெறுவது அரிய விஷயமாக இருக்கிறது. ஆயினும், எனக்கு அப்பெருமானின் திருவருள்தான் வேண்டும், மற்ற அருளெல்லாம் அருளே இல்லை. ஆனால், அவனுடைய அருள் கிடைக்கும்வரை என் உயிர் நிலைக்குமா? பகல் நீங்கிய மாலை நேரம் வந்தது, என் நெஞ்சைக் காணவில்லை, சிவன், பிரமன், சிறந்த திருமகள் சேர்ந்த எம்பெருமானின் திருமேனி என் உயிரை அறுக்கிறது. தாய்மார்களே, இனி நான் எங்கே சென்று புகுவேன்? என்ன செய்வேன்? யாரிடம் என்ன சொல்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.