பாடல் 7
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்,
ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை,
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன்கண் அஃதே,
சீர் உற்ற அகில் புகை, யாழ் நரம்பு,
பஞ்சமம், தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புதுமணம் முகந்துகொண்டு எறியுமாலோ.
மேகத்தைப்போன்ற திருமேனியைக்கொண்ட நம் கண்ணன், தன்னுடைய கள்வச்செயல்களாலே என்னுடைய தனி நெஞ்சத்தைக் கவர்ந்துவிட்டான், அது இப்போது அவனிடம் இருக்கிறது, நறுமணம் மிக்க அகில் புகை, யாழின் நரம்பு, பஞ்சமப் பண், குளிர்ச்சியான, பசுமையான சந்தனம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு என்மேல் போர் தொடுக்கிறது வாடைக்காற்று, குளிர்ச்சியான மல்லிகைப் பூவின் புதுமணத்தை முகந்துகொண்டு வந்து என்மேல் எறிகிறது, தாய்மார்களே, நான் யாருக்கு என்ன சொல்லுவேன்? இந்த மிகுதியான, குளிர்ந்த வாடைக்காற்றை என் உயிர் தாங்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.