பாடல் 8
புதுமணம் முகந்துகொண்டு எறியுமாலோ
பொங்கு இள வாடை, புன் செக்கராலோ,
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனின் கொடிது, இனி அதனில் உம்பர்
மது, மணம் மல்லிகை மந்தக் கோவை,
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம்குழற்கே உய்யேன்.
பொங்குகின்ற இளவாடைக்காற்று புதிய நறுமணத்தை முகந்துகொண்டு வந்து என்மேல் எறிகிறது, புன்மையான செக்கர் வானமும் என்னை வருத்துகிறது, இப்படி நான் வருந்தும்படி என்னைக் கலந்து பிரிந்த எம்பெருமான் கண்ணனின் கள்வச்செயல், எம்பெருமானைவிடக் கொடியது. அதைவிடக் கொடியவை, தேனும் நறுமணமும் கலந்த மல்லிகையைச் செறிவாகத் தொடுத்த மாலை, வளமான பசும் சந்தனம் ஆகியவை, இவற்றைவிடக் கொடியது, நல்ல அருளையுடைய ஆய்ச்சியருக்காகப் பஞ்சமம் என்கிற பண்ணிலே ஊதும் இனிய குழலோசை. (இவை அனைத்தும் என்னை வருத்துகின்றன.) அந்த இனிமையான குழலோசையைக் கேட்டபின்னர் நான் எப்படி உயிரைத் தாங்கிநிற்பேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.