பாடல் 9
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடை, தன் செய்கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசித்
தூமொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கிப்
பேது உறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம், அம்ம, அம்ம,
மாலையும் வந்தது, மாயன் வாரான்.
கண்ணன் ஊதுகின்ற அந்த இனிய குழலோசையைக் கேட்டு என்னால் உயிரைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, அவன் இடையிடையே பேசும் சில சொற்களையும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் கண்ணன் கண்களாலே தூது அனுப்புவதுபோல் பேசுவான், தூய்மையான பாடல்களோடு கூடிய இசையாலே இன்னும் இன்னும் பேசுவான், தன்னுடைய ஈடுபாடு முகத்திலே தோன்றுமாறு செய்து பெண்களை நோகச்செய்வான், பேதைப்பெண்களின் நெஞ்சில் இருக்கும் ஊடல் அறுந்துபோகும்படி பாடுவான், இதையெல்லாம் நான் சிறிதும் அறியவில்லை, அடடா, மாலைப்பொழுது வந்துவிட்டதே, மாயன் இன்னும் வரவில்லையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.