பாடல் 11
வண்ணம் மணிமாடம் நல்நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ஆர் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே.
அழகிய மணிமாடங்கள் நிறைந்த, நல்ல திருநாவாயிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை, திண்மையான மதிள் சுவரைக்கொண்ட தென்குருகூர்ச் சடகோபன்பண்ணோடு கூடிய தமிழிலே ஆயிரம் பாடல்களில் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் இவ்வுலகை ஆள்வார்கள், மல்லிகையின் மணம்போல் எம்பெருமானையும் சேர்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.