நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5

அப்பெருமானின் திருவருளைப்

செ.குளோரியான்

பாடல் 5

யாம் உடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ,
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ,
யாம் உடை ஆயன் தன் மனம் கல்லாலோ,
அவன் உடைத் தீம்குழல் ஈருமாலோ,
யாம் உடைத் துணை என்னும் தோழிமாரும்
எம்மின்முன் அவனுக்கு மாய்வராலோ,
யாம் உடை ஆர் உயிர் காக்குமாறு என்?
அவன் உடை அருள்பெறும் போது அரிதே.

என்னுடைய நெஞ்சமும் எனக்குத் துணையாக நிற்கவில்லை, பசுக்கள் மேய்ந்துவிட்டு ஊரை வந்தடையும் மாலை நேரம் என்னை வருத்துகிறது, என்னுடைய ஆயனாகிய எம்பெருமானின் மனமோ கல்லாக இருக்கிறது, அவனுடைய இனிய குழலோசை என்னை அறுக்கிறது, நான் துணையாகக் கருதிய என்னுடைய தோழிமார்களும் எனக்குமுன் அவனை எண்ணி வருந்துகிறார்கள், இனி நான் என்னுடைய உயிரை எப்படிக் காத்துக்கொள்வேன்? அப்பெருமானின் திருவருளைப் பெறுவது அரிய விஷயமாக இருக்கிறதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT