நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

வேத நூல்கள்

செ.குளோரியான்

பாடல் - 3

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே.

வேத நூல்கள் அரிய பொருட்களை அறிந்தவை, எம்பெருமான் அரியவனாக இருக்கும் தன்மையை அவை அறிந்திருக்கின்றன எனலாம். இவ்வுண்மையை அறிந்த ஞானிகள் எல்லாரும் அரியை வணங்கித் தங்களுடைய நோய்களை அறுக்கும் மருந்தை அறிந்தார்கள்.

பாடல் - 4

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்,
கரும் தேவன், எம்மான், கண்ணன், விண் உலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே.

‘உன்னை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும்படி செய்யும் மருந்தானவனே’ எனப் பெரிய தேவர் கூட்டங்கள் ஆனந்தத்தோடு பிதற்றுகின்ற பிரான், கருத்த திருமேனித் தேவன், எம்மான், கண்ணன், பரமபதத்தைத் தரும் தேவன், எம்பெருமான், மனமே, அவனை நீ இடைவிடாமல் போற்றுவாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT