சேக்கிழார் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்) - உரையாசிரியர் அ.ஜம்புலிங்கம்; முதல் காண்டம் பக். 672; ரூ.800; இரண்டாம் காண்டம் பக். 792; ரூ. 900; இந்துமதி பதிப்பகம், லால்பேட்டை தெரு, சிதம்பரம் -608001. ✆ 93459 79726.
சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்ஊஊஊபு நூலாகவும் சேக்கிழார் படைத்த பெரிய புராணத்தை, உரையாசிரியர் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்களாகப் பிரித்து 4,286 பாடல்களுக்கும் உரை எழுதி உள்ளார்.
வடமொழியில் வேதங்கள் முதன்மையாக விளங்குவதுபோல, தமிழ் மொழியில் திருமுறைகள் எல்லாம் முதன்மை பெற்றுத் திகழ்கின்றன. பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணம் 63 நாயன்மார்கள் வரலாற்றையும், அவர்தம் திருத்தொண்டு திறங்கள் குறித்தும் எடுத்துரைக்கிறது.
பெரிய புராணத்தின் 4,286 பாடல்களுக்கும் உரை எழுதுதல் எளிய செயல் அல்ல. ஓராண்டுக்கும் மேலான கடினமான முயற்சியின் விளைவாக "மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்' என்ற இந்நூலை செம்மையாக வெளிக்கொணர்ந்த உரையாசிரியரின் செயல் போற்றத்தக்கது.
செயற்கரிய செயல்களைச் செய்த பெரியோர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, மக்கள் சிந்தையுள் காணப்படும் ஆணவ இருளைப்போக்கி, வீடுபேற்றை அளிக்கவல்ல பெரிய புராணத்தின் இந்த உரைநூல் தமிழர்களுக்கும், சைவ அடியார்களுக்கும், பக்தி இலக்கியத்துக்கும் கிடைத்த பொக்கிஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.