முகப்பு
தினம் ஒரு தேவாரம்

7. வெறிவிரவு கூவிள - பாடல் 10

இந்த பாடலில் அப்பர் பிரான், தனது தீவினையின் காரணமாக நன்னெறி ஆகிய சிவநெறியை பின்பற்றாமல்,

Updated On : 20 நவம்பர், 2015 at 12:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:11 PM

தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமை கொண்ட வானவர்க்கும் தானவர்க்கும்
என் பெருமான் தன்னைக்
கொல்லை வாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
எல்லை காண்பரியானை எம்மான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

இந்த பாடலில் அப்பர் பிரான், தனது தீவினையின் காரணமாக நன்னெறி ஆகிய சிவநெறியை பின்பற்றாமல், சமண சமயம் சார்ந்ததாக கூறுகின்றார். தொல்லை வான் வினைகள் = பழைய, பெரிய வினைகள்; சைவ சமயம் தான் நன்னெறி என்பதை உணர்ந்த அப்பர் பிரான், நன்னெறி ஆவது நமச்சிவாயவே என்று சொற்றுணை வேதியன் பதிகத்தில் பாடியதை நாம் இங்கே நினவு கூரலாம்.

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கெலாம்

நன்னெறி ஆவது நமச்சிவாயவே

வல்லையே = விரைந்து; குருந்து ஒசித்து = குருந்த மரத்தினை வளைத்து: இந்த குறிப்பு பாகவத நிகழ்ச்சியை குறிக்கின்றது, தங்களது உடைகளை கரையில் இருந்த குருந்த மரத்தில் வைத்துவிட்டு உடையேதும் இன்றி யமுனை நதியில் நீராடிய பெண்கள் தாங்கள் குளித்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே பலராமர் வருவதைக் கண்டபோது, நாணம் கொண்டனர். தங்களது மானம் காப்பற்றப்பட வேண்டும் என்று கண்ணபிரானை வேண்டிய போது, அவர் குருந்த மரத்தின் கிளைகளை வளைத்து, அவர்களது மானத்தைக் காப்பாற்றினார் என்பது பாகவத நிகழ்ச்சி. தானவர் = அசுரர்; தூறு என்றால் கல்லும் முள்ளும் நிறைந்த பாதை: ஆறு என்றால் நல்வழி: இந்த பொருட்களின் அடிப்படையில் தூற்றியேன் ஆதரியேன் என்ற தொடருக்கு, கல்லும் முள்ளும் நிறைந்த வழி போன்று கடுமையான வழியும், முக்தி நிலைக்கு அழைத்து செல்ல இயலாத வழியுமாகிய சமண சமயத்தை விடுத்து, அவ்வழியே மேலும் செல்லாதவாறு ஞானமாகிய விளக்கினை காட்டி, நல்வழியாகிய சைவ சமயத்தை உணர்த்தி தன்னை சிவபெருமான் நெறிப்படுத்தியதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் என்றும் பொருள் சொல்வதும் உண்டு.

பொழிப்புரை

முந்தைய பிறப்புகளில் எனது உயிர் ஈட்டிய, தீவினைகள் என்னைத் தொடர்ந்து வந்து பற்றியமையால், நான் சமண சமயம் சார்ந்து சிவபெருமானை இகழ்ந்து பேசினேன். எனது வினைகளின் பயனாக எனக்கு சூலை நோயும் வாய்த்தது. சிவபெருமானின் அருளால், எனது தமக்கையார் காட்டிய நல்வழியினை நான் பின்பற்றியபோது, பெருமான் எனது இடரினை மிகவும் விரைவாகத் தீர்த்தார்; மேலும் என்னை அடிமையாகவும் ஏற்றுக்கொண்டார். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, குருந்த மரத்தின் கிளைகளை வளைத்து அந்த கிளைகளிலிருந்த ஆடைகளை, நதியில் ஆடைகள் ஏதுமின்றி நீராடிக்கொண்டிருந்த ஆயர்குலச் சிறுமிகளுக்கு அளித்து அந்த சிறுமிகளின் மானத்தை காப்பாற்றியும் அந்த சிறுமியர்களின் உள்ளத்தைத் தனது குழலோசையால் கொள்ளை கொண்டும் லீலைகள் புரிந்த கண்ணபிரான் ஆகிய திருமாலும், நான்முகனும் எங்கும் தேடியும் காணாதவாறு அனல் பிழம்பாய் நின்ற சிவபெருமானை, எனது தலைவனை, பண்டைய நாட்களில் அறிவினில் ஏழையாகத் திகழ்ந்தபோது இழிவாக பேசினேன். எனது செயலால் ஏற்பட்ட நிலை பரிதாபத்திற்கு உரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.