முகப்பு
தினம் ஒரு தேவாரம்

8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 10

பெரிய கயிலை மாமலை குலுங்குமாறு, மிகுந்த ஆரவாரத்துடன் தனது நீண்ட கைகளால் பேர்த்தெடுக்க முயற்சி செய்த,

Updated On : 9 டிசம்பர், 2015 at 2:32 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:17 PM

தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்

கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய

முடக்கினார் திருவிரல் தான் முருகமர் கோதை பாகத்து

Advertisement

அடக்கினார் என்னை ஆளும் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

தடக்கை = அகலமுடைய கை: தடவரை = அகன்ற மலை, இங்கே கயிலாய மலை குறிப்பிடப்படுகின்றது. ஆர்த்து = மிகுந்த ஆரவாரம் செய்து: கிடக்கை = கிடத்தல்: ஓங்கு = மிகுதியாக பெருகிய: முருகு = நறுமணம்:

பொழிப்புரை

பெரிய கயிலை மாமலை குலுங்குமாறு, மிகுந்த ஆரவாரத்துடன் தனது நீண்ட கைகளால் பேர்த்தெடுக்க முயற்சி செய்த, அரக்கன் தனது முயற்சியினை கைவிடுமாறு அவனது ஒளிவீசும் மணிமுடிகள் கீழே சாய, தனது திருவிரல் ஒன்றினை அழுத்தி முடக்கியவர் சிவபெருமான் ஆவார். அவர் நறுமணம் வீசும் மலர்களைத் தனது கூந்தலில் சூடிய உமையம்மையை, உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். அவர் தான் என்னை ஆட்கொண்டவரும் திருவதிகை வீரட்டானத்தில் உறையும் இறைவனும் ஆவார்.

முடிவுரை

பதிகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில், உள்ளத்தில் பக்தியுடன் இறைவனைப் பாடிப் பணிய வேண்டும் என்றும், தமக்கு இயன்றவரையில் இசையுடன் காலம் தவறாது பாட வேண்டும் என்றும், தினமும் பாட வேண்டும் என்று கூறி, நாம் வழிபாடு செய்ய வேண்டிய முறைகளை அப்பர் பிரான் எடுத்துரைக்கின்றார். அதிகை வீரட்டானத்து இறைவனைப் பாடும் அப்பர் பிரானுக்கு, வழுவூர் மற்றும் திருக்குறுக்கை தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்கள் நினைவுக்கு வந்ததுபோலும். அந்த நிகழ்ச்சிகளை பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தனது நெஞ்சினுள்ளே புகுந்து தனக்கு ஞான உணர்வினை நல்கிய கடவுள் என்று கூறும் அப்பர் பிரான், மூன்றாவது பாடலில் பிறவிப் பிணியை நீக்கிக்கொள்ள விரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

நாம் அனைவரும் தத்துவங்களில் பிடியில் அகப்பட்டு வருந்தினாலும், நம்மால் இயன்ற அளவு, இறைவனைப் பற்றிய சிந்தனை வளர்த்துக்கொண்டால், இறைவனின் அருள் நிச்சயம் நமக்கு உண்டு என்ற அறிவுரை நான்காவது பாடலில் காணப்படுகின்றது. பக்தியுடன் இறைவனைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் மனத்தினில் உறையும் சிவபெருமான் என்று ஐந்தாவது பாடலில் குறிப்பிட்டு, ஆறாவது ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் இறைவனை இசைப் பாடல்கள் மூலம் போற்ற வேண்டும் என்றும் வேதங்களில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வழிபட வேண்டும் என்றும், மனம் ஒன்றி வழிபட வேண்டும் என்றும் கூறுகின்றார். எட்டாவது பாடலில் தனது புன்மையான மனத்திலும் புகுந்து ஆட்கொண்ட இறைவன் என்று கூறி நம்மை இறைச் சிந்தையில் ஈடுபட ஊக்குவிக்கும் அப்பர் பிரானை பின்பற்றி, நாமும் சிவபிரானைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, இறைவன் அப்பர் பிரானை ஆட்கொண்டது போன்று நம்மையும் ஆட்கொள்ள வழி வகுப்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.