முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 6

வாழ்க்கை மற்றும் உலகத்தின் ஒழுங்குமுறையாக இருப்பவனும், அந்த ஒழுங்குமுறையின் தலைவனாக இருப்பவனும், உயிர்கள் சென்ற பிறவிகளில்

Updated On : 19 ஏப்ரல், 2016 at 3:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:35 PM

பாடல் 6

நெதி ஒப்பானை நெதியில் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

நெதி = நியதி என்ற சொல்லின் திரிபு. அதி = உயிர்களின் உணர்வினைக் கடந்து நிற்கும் நிலை.

பொழிப்புரை

வாழ்க்கை மற்றும் உலகத்தின் ஒழுங்குமுறையாக இருப்பவனும், அந்த ஒழுங்குமுறையின் தலைவனாக இருப்பவனும், உயிர்கள் சென்ற பிறவிகளில் சேமித்து வைத்த வினைகளின் பயனாக இருப்பவனும், தேவர்களால் அறியமுடியாதவனும், உயிர்களின் உணர்வினைக் கடந்து நிற்பவனும், அனைத்து உயிர்களும் சரண் அடையத்தக்க இடமாக இருப்பவனும் அரத்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை சென்று காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.